nayanthara
பிகில் பட விழாவை அப்படத்தின் நாயகி நயன்தாரா புறக்கணித்ததன் பின்னணி தெரியவந்துள்ளது.

Nayanthara not attending Bigil audio launch – தமிழ் சினிமா நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நயன்தாரா. மாயா, கோலமாவு கோகிலா, அறம் ஆகிய படங்கள் ஹீரோ இல்லாமல் நயன்தாராவிற்காகவே படங்கள் ஓடியது. எனவே, அவரை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆனால், நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் நாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கு பிரத்தியோக காரணம் எதுவும் இல்லையாம். பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான விழாக்கள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் புரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை. எனவேதான் அவர் பிகில் பட விழாவிலும் கலந்து கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.