பெத்த மகளான நயன்தாராவின் திருமணத்தில் அவருடைய அம்மா கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ‌‌‌‌‌

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி ஏழு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

பெத்த மகள் நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்காத அம்மா - வெளியான அதிர்ச்சி காரணம்.!!

நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தன்னையே அழைக்கவில்லை என அவருடைய பெரியம்மா வருத்தத்தோடு பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நயன்தாராவின் தாயார் கூட இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் கேரளா சென்று நயன்தாராவின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.

பெத்த மகள் நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்காத அம்மா - வெளியான அதிர்ச்சி காரணம்.!!

நயன்தாராவின் தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்குச் சென்று நயன்தாரா தாயாரிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். மேலும் ஓரிரு நாட்கள் தாயாருடன் தங்கிவிட்டு அவர் சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.