Simbu
நடிகை நயன்தாரா அம்மன் படத்திற்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக ஆர்.ஜே பாலாஜி கூறிய நிலையில் வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார்.

இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து வருவதாக ஆர்.ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வெளிநாட்டு அசைவ பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இது தான் உங்க விரதமா என கலாய்த்து வருகின்றனர்.

இதே போல் சமீபத்தில் சபரி மலைக்கு மாலை போட்டு கொண்டுள்ள சிம்பு 5 ஸ்டார் ஹோட்டலில் விரதம் இருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.