Thalaivar 168
தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒப்பந்தமாகியுள்ளார், இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர், இவர்களில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்க மற்ற இருவரும் ஜோடி என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளார். இவர் தான் ரஜினிக்கு ஜோடியும் எனவும் கூறப்படுகிறது. அப்போ குஷ்பூ, மீனாவுக்கு என்ன வேலை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தர்பாரில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் பேசப்படவில்லை என்றாலும் சிவாவின் மீதுள்ள நம்பிக்கையால் நயன்தாரா இப்படத்தில் இணைந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.