நீண்ட நாட்களுக்கு பின் நயன்தாரா ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

Nayanthara is affraid of making news films – தமிழில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்து வருபவர் நயன்தாரா. இவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கின்றனர். ஹீரோ இல்லாமல் நயன்தாராவையே மையமாக கொண்டு உருவான மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்கள் வசூலி வாரிக்குவித்தது. எனவே, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்.

எப்பா ஷெரினா இது? நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸா? – புகைப்படங்கள் இதோ

தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான எந்த விழாவிலும் அவர் கலந்து கொள்வதில்லை. அவர் பேட்டி கொடுப்பதும் மிகவும் அரிதான ஒன்று. இந்நிலையில், இவரின் புகைப்படம் ‘வோக்’ இதழில் வெளியாகியுள்ளது.

அதில் பெண்களை முன்னிலைப்படுத்தி வரும் கதைகளில் நாயகியாக நடித்தாலும், ஏன் சின்னும் சில ஹீரோக்களுடன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ‘ சில சமயங்களில் வேறு வழியில்லை. எவ்வளவு நாட்கள்தான் முடியாது என என்னால் கூற முடியும்’ என அவர் கூறினார். மேலும் ‘வெற்றியை நான் தலைக்கேற விடமாட்டேன். உண்மையை சொல்லப்போனால் நான் எப்போதும் ஒரு பயத்திலேயே வாழ்ந்து வருகிறேன். சரியான படத்தை கொடுக்க மாட்டேனா என்ற பயத்தில் வாழ்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.