லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா புதிதாக வாங்கியுள்ள அப்பார்ட்மெண்ட் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara in New Home Price Details : இனிமேல் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு பல மொழிகளில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சோலோ நாயகியாகவும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.

விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவருக்கு அவருடன் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணமும் ரகசியமாக நடைபெற உள்ளது. திருமணம் நடந்து முன்னரே அதனை ரசிகர்களுக்கு அறிவிப்பேன் என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சாலை விபத்து : பிரபல கிரிக்கெட் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

தற்போது வரை சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் நயன்தாரா வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சென்னை போயஸ் கார்டனில் புதிதாக அப்பார்ட்மென்ட்டில் இரண்டு வீடுகளை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

அதிலும் குறிப்பாக இந்த வீடுகளின் விலை 18 கோடி என தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் வாயடைத்துப்போய் வருகிறது. 18 கோடியில் வீடா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.