உங்க படம்னா ஒரு நியாயமா மற்றவர்கள் படம்னா ஒரு நியாயமா நயன்தாராவை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Nayanthara in Netrikann Promotion : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த உட்பட பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நெற்றிக்கண்.

அவள் படத்தை இயக்கிய மிலிந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

உங்க படம்னா ஒரு நியாயம் மற்றவங்க படம்னா ஒரு நியாயமா? நயன்தாராவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.!!

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நயன்தாரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக நயன்தாரா எந்த படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தற்போது தன்னுடைய சொந்தத் தயாரிப்பு என்பதால் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது ரசிகர்கள் விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

உங்க படம்னா ஒரு நியாயம் மற்றவங்க படம்னா ஒரு நியாயமா என ரசிகர்கள் நயன்தாராவை விமர்சனம் செய்து வருகின்றனர்.