Nayanthara in Netrikann Movie Update
Nayanthara in Netrikann Movie Update

நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுடன் 22 வயதேயான இளம் நடிகர் ரொமான்ஸ் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nayanthara in Netrikann Movie Update : தமிழ் சினிமாவை லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவுக்கு பிளாஷ்பேக் போஷன் ஒன்று உள்ளது. அதில் நயன்தாரா சிறு வயது பெண்ணாக நடிக்க உள்ளார்.

இந்த பிளாஷ்பேக் காட்சியில் நயன்தாராவுக்கு ஜோடியாக 22 வயதேயான சரண் சக்தி ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் வட சென்னை படத்தில் தனுஷிற்கு மச்சான் ஆக நடித்திருந்தார். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 வயது நடிகருடன் நயன்தாரா ரொமான்ஸ் செய்ய இருப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.