Annathae

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் டூயட் பாட ஹைதராபாத் பறந்துள்ளார் நடிகை நயன்தாரா.

Nayanthara in Hyderabad : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா ஹைதராபாத் சென்றுள்ளார். ஹைதராபாத் விமான நிலையத்தில் இறங்கிய நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.