நயன்தாராவின் தந்தை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara Father Health Status : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடலி பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் கொச்சி சென்றிருந்தனர். நயன்தாராவின் தந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டு அதன் காரணமாக இவர்கள் கேரளா சென்றனர். அங்கு தன்னுடைய மகளின் திருமணத்தை பார்க்க ஆசைப்படுவதாக அவருடைய தந்தை விரும்பியதால் நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்படியான நிலையில் தற்போது நயன்தாராவின் தந்தை கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.