நயன்தாராவை கேட்க தைரியம் இல்லை என கேட்கிறீர்கள் என நெட்டிசன்களை விளாசியுள்ளார் வனிதா விஜயகுமார்.

Nayanthara Fans Vs Vanitha Vijayakumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்து திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்றார்.

நயன்தாராவை கேட்க தைரியம் இல்லை என்னை கேட்கறீங்க.. நெட்டிசன்களை விளாசிய வனிதா விஜயகுமார்.!!

தற்போது படங்களில் பிஸியாக இருக்கும் வனிதா விஜயகுமார் பவர் ஸ்டாருடன் நான்காவது திருமணம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதன் பின்னர் இது வெறும் படத்தின் பிரமோஷன் என தெரியவந்தது. இருவரும் பிக்கப் டிராப் என்ற படத்தில் இணைந்து நடிப்பதாக தெரிவித்திருந்தனர்.

சுதந்திர தின விழா : சென்னையில், ரூ.1.83 கோடியில் நினைவுத்தூண்..

வனிதாவின் இந்தச் செயலை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இதேபோல்தான் நயன்தாரா ராஜா ராணி புகைப்படத்தின் போது ஆர்யாவுடன் திருமணம் என கூறினார். அப்போது அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. அவருக்கு ஒரு நியாயம் வனிதாவுக்கு ஒரு நியாயமா என கூறி இருந்தார்.

http://மீண்டும் OTT-க்கு செல்லும் சூர்யாவின் படம் – வெளியான SHOCKING Update.! | Pa.Ranjith | Latest News HD

இதனை அடுத்து வனிதா ஆமா இதை நீ சொல்ல மறந்துட்டேன் என சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். வனிதாவின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.