Nayanthara Decision on Upcoming Movies

இனிமே இப்படித்தான் என கதைத் தேர்வில் லேடி சூப்பர் ஸ்டார் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Nayanthara Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் அவர் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாத்த, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி நடிகர்களுடன் சேர்ந்து டூயட் பாடுவதற்கு எல்லாம் ஓகே சொல்ல மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம் அவருடைய கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.