Nayanthara and Kamal
Nayanthara and Kamal

Nayanthara and Kamal – சென்னை: ஒரு கலைஞனாக இருந்து கொண்டு ராதாரவி இவ்வாறு நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது என நடிகர் மற்றும் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும், ‘கொலையுதிர்’ காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதாரவி பங்கேற்றார்.

இந்நிலையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராதாரவி, “நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார்.

முன்பெல்லாம் கே.ஆர்.விஜயவாவை மட்டும் அம்மன் வேடங்களுக்கு நடிக்க வைப்பார்கள்.

தற்போது யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் போடலாம்.. ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம், பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம்” என்று நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசினார்.

இதனால், சமூக வலைதளங்களில் இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதனிடையே இன்று காலை ராதாரவி இவ்வாறு பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ராதாரவியின் இந்த செயல் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், ‘ ராதாரவி ஒரு கலைஞராக இருந்து கொண்டு நயன்தாராவை இப்படி பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மேலும் அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு திமுகவுக்கு பாராட்டுகள்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here