சூர்யா, விஜய் சேதுபதி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நவரசா வெப்சீரிஸ் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Navarasa Web Series Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் தயாரிப்பில் கே வி ஆனந்த், கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பியாஜ் நம்பியார், ஹலிதா, ஒன்றாம் என கிட்டத்தட்ட ஒன்பது இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள அந்த காட்சிகள் திரைப்படம் தான் நவரசா.

சூர்யாவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள நவரசா வெப்சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

இந்த படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி நாயர், அம்மு அபிராமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.