நவரசா வெப்சீரிஸ் பிளிஸ் இப்போது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்.

Navarasa Release Date : தமிழ் சினிமாவில் வெப்சீரிஸ் தொடர்கள் உருவாகி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தொடர் தான் நவரசா. இதனை ஒன்பது இயக்குனர்கள் இயக்க பதினோரு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் என பல இசை அமைப்பாளர்கள் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

நவரசா வெப்சீரிஸ் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவலை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள பகுதியை பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இவர் புகைப்படம் ஒன்றுடன் இந்த நவரசா சீரிஸ் தொடர் ஆகஸ்ட் மாதத்தில் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகும் என பிசி ஸ்ரீராம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.