Navarasa Release Date Announcement

நவரசா படத்தின் ரிலீஸ் தேதியை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Navarasa Release Date Announcement : இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான “நவரசா” Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் திரையுலகின் பொன்தருணமாக நிகழவிருக்கிறது.

தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.
மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

மனித உணர்வுகள் – கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது. தமிழின் பல முன்னனி, திரை ஆளுமைகள் இணைந்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் தமிழ் திரைக்கு பெருமை சேர்க்கும் படைப்பாக ஒரு உன்னத தருணமாக நிகழவிருக்கிறது. தமிழ் திரையுலகில் பெரும் புகழையும் பிரபல்யத்தையும் குவித்திருக்கும் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை ஆளுமைகள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்து இந்த கனவு படைப்பினை நிகழ்த்தியிருக்கிறார்கள். தமிழின் உன்னத படைப்பாளிகள் ஒன்றினைந்து உருவாக்கியிருக்கும் இப்படைப்பில் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள், கொடிய நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் பணிபுரிந்துள்ளார்கள்.

சிவராத்திரி விரதம் : வருகின்ற பலன்கள்

தமிழ் திரைத்துறையில் தங்களின் தரமான படைப்புகள் வழியே உலக அளவில் சாதனை புரிந்த முன்னணி படைப்பாளிகளான
அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர்.

KGF CHAPTER 2 தமிழ்நாடு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – இயக்குநரின் வைரல் ட்வீட்! | yash

படத்தின் விபரங்கள் :

தயாரிப்பாளர்கள் – மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

  1. தலைப்பு – எதிரி (கருணை)
    இயக்குநர் – பெஜோய் நம்பியார்
    நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி
  2. தலைப்பு – சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை )
    இயக்குநர் – ப்ரியதர்ஷன்
    நடிகர்கள் – யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு
  3. தலைப்பு -புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)
    இயக்குநர் – கார்த்திக் நரேன்
    நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா
  4. தலைப்பு – பாயாசம் ( அருவருப்பு )
    இயக்குநர் – வசந்த் S சாய்
    நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்
  5. தலைப்பு – அமைதி ( அமைதி )
    இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்
    நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்
  6. தலைப்பு – ரௌத்திரம் ( கோபம் )
    இயக்குநர் – அர்விந்த் சுவாமி
    நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்
  7. தலைப்பு – இண்மை ( பயம் )
    இயக்குநர் – ரதீந்திரன் R பிரசாத்
    நடிகர்கள் – சித்தார்த், பார்வதி திருவோர்து
  8. தலைப்பு – துணிந்த பின் (தைரியம்)
    இயக்குநர் – சர்ஜூன்
    நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்
  9. தலைப்பு – கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )
    இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்
    நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்