வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது சூர்யாவின் கிடார் கம்பியின் மேல் நின்று பாடல்.

Navarasa First Single Track Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தியில் ரீமேக் ஆக உள்ள சூரரைப்போற்று படத்தில் சூர்யாவே ஹீரோவாக நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த சூர்யா பாடல் - செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மேலும் இவர் மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா என்ற வெப்சீரிஸ் தொடரில் கிட்டார் கம்பியின் மேல் என்று என்ற கதையில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நவரசா தொடரில் இருந்து முதல் பாடலாக சூர்யா நடித்துள்ள தூரிகா பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.

தற்போது இந்த பாடல் வீடியோ வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கார்த்திக் இசையமைத்து இந்த பாடலை பாடியுள்ளார். மதன் கார்க்கி ஒவ்வொரு வரியையும் ரசித்து ரசித்து எழுதியுள்ளார்.