Natural Health Tips Poppy Seeds : If you drink a cup of milk you will be healed. KOllywood | Tamil Cinema | Health Tips | Daily Health Tips | Top 10

Natural Health Tips Poppy Seeds :

* கருவேப்பில்லை 1 பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து பூசி காயவிட்டு குளிக்க அம்மை தழும்பு நீங்கும்.

* கசகச, கற்கண்டு சாப்பிட்டு வர நன்றாக தூக்கம் வரும்.

* தேங்காய் துவையல், கசகசா சேர்த்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.

கால மாற்றத்தால் சிறு வயதில் ஏற்படும் முதுமைத்தன்மைக்கு இழந்த இளமையை பெற அமுக்கிராபொடி கசகசா, பாதாம் பருப்பு, சாராபருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

* கசகசா, துத்தி இலைசேர்த்து அரைத்து தடவ மூட்டு வலி குறையும்.

* கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன் முகத்தில் தடவி காய்ந்த பிறகு முகத்தை கழுவி வர முகம் வலுவலப்பாக இருக்கும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான, சில டிப்ஸ்! தெரிந்து கொள்வோமா?.

* மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து பாலுடன் கொடுக்க சிறுநீரக கோளாறு குறையும்.

* கசகசாவை பசும்பாலில் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

* கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் கிராம்பு சேர்த்து பொடி செய்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குறையும்.

* கசகசா எடுத்து அதனுடன் மாதுளம் பிஞ்சை சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

* காய்ந்த கறிவேப்பிலை,ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல் சுக்கு இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிடவும்.

* உடல் பலம்பெற கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்துக்கொண்டு, நன்கு தூளாக்கி, பசும்பால், தேன், நெய், தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.