Natty is Pair for Aishwarya Rajesh : Sivakarthikeyan, SK 16, Anu Emmanuel, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Natty is Pair for Aishwarya Rajesh :

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் தான் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாம்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

SUN PICTURES SK16 Sivakarthikeyan Pandiraj Movie Pooja Stills

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடி யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் தான் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாம்.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.