Sathish As Hero

குக் வித் கோமாளி பவித்ரா சதீஷ்க்கு ஜோடியானது குறித்து நடராஜ் பதிவில் அவரை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Natrajan About Sathish As Hero : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சதீஷ் அடுத்ததாக ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடிக்க உள்ளார்.

படத்தில் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன் பூஜையில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறினார். இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரரான நடராஜ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சதீஷ் அண்ணா வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் மீது நிறைய மரியாதை இருந்தது. இப்படி சினிமா பற்றி மற்றவர்களைப் போல நீங்களும் பதிவிட்டு அதனைக் எடுத்துக்கொள்ளாதீர்கள். கிரிக்கெட் மட்டும் பாருயா என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த பதிவை தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.