Natpuna Ennanu Theriyuma Review | NET Movie Review | Kavin | Raju | Arun Raja Kamaraja | Natpuna Ennanu Theriyuma Full Movie Review

சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் ராஜ், ரம்யா நம்பீசன், அருண் ராஜா காமராஜா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தடைகளையும் சோதனைகளை தாண்டி வெளியாகியுள்ள திரைப்படம் நட்புனா என்னனு தெரியுமா?

Natpuna Ennanu Theriyuma Review : 

படத்தின் கதைக்களம் :

கவின், அருண் ராஜா காமராஜா, ராஜு ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தால் இனி பெண்களே நம்முடைய வாழ்க்கையில் இல்லை என முடிவு செய்து விடுகின்றனர்.

வெட்டியாக ஊரை சுற்றி வந்த இவர்கள் சுயல் தொழில் ஒன்றை தொடங்கிய பின்னர் ராஜுக்கு ரம்யா நம்பீசன் மீது காதல் ஏற்படுகிறது. நண்பர்களுக்கு தெரியாமல் ராஜு தன்னுடைய காதலியை சந்திக்க செல்வது கவினுக்கும் அருண் ராஜா காமராஜாவுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் ராஜு தன்னுடைய நண்பர்களை அறிமுகப்படுத்துவதாக கூறி ரம்யா நம்பீசனை அழைத்து வருகிறார். அதன் பின்னர் கவினுக்கும் ரம்யா மீது காதல் ஏற்பட அந்த காதலை ரம்யாவும் ஏற்று கொள்கிறார். இதனால் இவர்களின் நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

அதன் பின்னர் என்ன நடக்கிறது? இறுதியில் ஜெயித்தது நட்பா? காதலா? என்பது தான் கலாட்டா நிறைந்த கதை.

ஜெயித்ததா Mr. லோக்கல்? – விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

கவின், அருண் ராஜா காமராஜா, ராஜு, ரம்யா நம்பீசன் என அனைவரின் நடிப்பு அட்டகாசம். கவின் முதல் படத்திலேயே தன்னை அக்மார்க் ஹீரோவாக நிலை நிறுத்தியுள்ளார்.

அருண் ராஜா காமராஜாவின் காமெடி சிரிக்க 100 % கேரண்டி. இனி முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவரை எதிர்பார்க்கலாம்.

ராஜுவின் நடிப்பும் சிறப்பு குறை சொல்லும் அளவிற்கு இல்லை.

நட்பை பிரிக்கும் காதலியாக வரும் ரம்யா நம்பீசன் கொடுத்த வேலையை குத்தம் சொல்ல முடியாத அளவுக்கு கொடுத்துள்ளார்.

இசை :

சி தரண் குமாரின் இசை பிரமாதம். பாடல்கள் சரியான இடத்தில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

கே யுவராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

இயக்கம் :

தனது முதல் படத்திலேயே காதலையும் நட்பையும் அழகான கோர்வையாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் சிவா அரவிந்த்.சிவா அரவிந்த்தின் முதல் முயற்சி வெற்றி வாகையை தேடி கொடுத்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. கதைக்களம்
2. இசை
3. காமெடி
4. நடிகர் நடிகைகளின் நடிப்பு

தம்ப்ஸ் டவுன் :

1. சிறு சிறு லாஜிக்கல் தவறுகள் தானே தவிர பெரிய அளவில் குத்தம் சொல்லும் அளவிற்கு எந்த காட்சிகளும் இல்லை.

REVIEW OVERVIEW
நட்புனா என்னனு தெரியுமா விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
natpuna-ennanu-theriyuma-reviewமொத்தத்தில் நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்பம் சிரிப்புக்கு பஞ்சமில்லாத காமெடி கலாட்டா.