National Boxing

National Boxing : தேசிய குத்துச் சண்டை சாம்பியன் ஷிப் தொடரில் சர்வீசஸ் அணியின் மணிஷ் கவுசிக் (60 கி.கி) மீண்டும் தங்கம் வென்றார்.

புனேவில் நடைபெற்ற சீனியர் ஆண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.

இதில் 60கி.கி., எடைப்பிரிவில் பைனலில் அன்குஷ் தாகியாவை வீழ்த்தினார் மணிஷ். இதன் மூலம் மீண்டும் தங்கம் வென்றார்.

பிறகு, 56கி.கி. எடை பிரிவில் பைனலில் ரயில்வே அணியின் கவுரவ் பிதுரி, சர்வீசஸ் அணியின் மதன் லாலிடம் தோல்வியடந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

அடுத்து நடந்த 64கி.கி. எடை பிரிவில் பைனலில் ரயில்வே அணியின் ரோகித் தோகாஸ், உ.பி. , அணியின் அபிஷேக் யாதவை தோற்கடித்து, தங்கம் வென்றார்.

சர்வீசஸ் அணி சார்பில் பைனலில் விளையாடிய 8 வீரர்களும் தங்கம் வென்றது குறிப்பிடதக்கது.

இதனை அடுத்து ஓட்டு மொத்த சாம்பியன் கோப்பையை சர்வீசஸ் அணி வென்றது. இரண்டே தங்கம் வென்ற ரயில்வே அணி இரண்டாம் இடம் பிடித்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.