Narthangai
Narthangai

Narthangai :

நீண்ட ஆயுளுக்கு நார்த்தங்காய், தெரியுமா உங்களுக்கு?

நார்த்தங்காய்:

☆ வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர் மலர் கனிகள் பயன்கொண்டவை.

(1) நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து குடித்து வர, உடல் வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும் தாகத்தையும் தணிக்கும்.

(2) பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன், இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால், பித்தம் தணியும்.

(3) நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

(4) இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

(5) கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

(6) சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும்.

இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.

(7) எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.

☆ முக்கிய குறிப்பு:
இயற்கையாக விளையக்கூடிய நார்த்தங்காய் நமக்கு பலவிதமான மருத்துவ பலன்களைக் கொடுக்கிறது பித்தம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here