15 லட்சம் வரை பேரம் பேசி தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பேட்டி அளித்துள்ளார்.

யூட்யூபில் உள்ள பிரபலமான யூடியூப் சேனல் நரி கூட்டம். youtube சேனலில் பல தொடர்களில் நாயகியாக நடித்தவர் ஜனனி. தற்போது வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

15 லட்சம் வரை நடந்த பேரம்.‌. படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் - நரி கூட்டம் ஜனனி பரபரப்பு பேட்டி

இப்படியான நிலையில் ஜனனி தனக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அதாவது ஒரு படத்தில் நடிக்க ஆடிஷன் சென்று இருந்தேன் எல்லாம் முடிந்து இந்த ரோல்தான் உங்களுக்கு என முடிவான பிறகு இயக்குனர் 2 அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் செய்ய வேண்டும் என கூறினார். என்ன அது என்ன கேட்க இயக்குனர் ஹீரோ அல்லது தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என சொன்னார்கள்.

இதைக் கேட்ட உடனே எனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஆனால் அப்போதும் என்னை விடுவதாக இல்லை மூன்று லட்சம், ஐந்து லட்சம், எட்டு லட்சம், 15 லட்சம் என பேரம் பேசினார்கள். ஆனாலும் முடியாது என சொல்ல சரி உங்களுடைய பிரண்ட்ஸ் யாரையாவது ரெபர் பண்ணுங்க என சொன்னாங்க.

15 லட்சம் வரை நடந்த பேரம்.‌. படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் - நரி கூட்டம் ஜனனி பரபரப்பு பேட்டி

கடைசியில் நான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை. பிறகு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நான்கு நாள் சூட்டிங் போனது. மேக்கப் போனில் இருக்கும் போது திடீரென இயக்குனர் வந்து தன் மீது கை வைக்க நான் பயந்து போனேன். அந்தப் படத்தில் ஹீரோ என்னுடைய நம்பர் என்பதால் உடனே அவருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பெரிய பிரச்சினையாகி விட்டது. அதன் பிறகு அந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை என ஜனனி கூறியுள்ளார்.

இவர் இப்படி இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்த விசியம் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.