
Narendra Modi wishes boxer MC Mary Kom – டெல்லியில் நடந்து முடிந்த உலக குத்துச் சண்டை போட்டி தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதி போட்டியில் தங்கம் வென்று உள்ளார்.
இந்த தொடரில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
மேரி கோம் 48 கிலோ பிரிவில் இறுதி போட்டியில் உக்ரைன் வீராங்கனையுடன் மோதி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து உள்ளார்.
உலக போட்டியில் மேரி கோம் 6-வது முறையாக பதக்கம் பெற்று உலக சாதனை படைத்து உள்ளார்.
57 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சோனியா இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி வென்றார்.
அரை இறுதியோடு வெளியேறிய இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர், லவ்லினா ஆகியோர் வெண்கலம் பெற்றனர்.
இதனை அடுத்து இந்திய பிரதமர் மற்றும் மத்திய விளையாட்டு துறை மந்திரி ஆகியோர் மேரி கோமை பாராட்டி உள்ளனர்.
மேலும், இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக மேரி கோம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.