Narendra Modi Bold Speech | Current Prime Minister of India | BJP | Lok Sabha Election Results 2019 | Tamilnadu | Narendra Modi

Narendra Modi Bold Speech :

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி இது இளைஞர்களின் வெற்றி என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றதால், பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு மலர்களை தூவி பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, “பாஜக பெற்றுள்ள இந்த வெற்றி நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வெற்றி” என்று தெரிவித்தார்.

பின்னர் பிரதமராக முதல் பயணத்திலேயே பல தடைகளை கடந்தேன்., இது எனது 2-வது பயணம், இதிலும் நான் தளர்ச்சியடைய மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளதாகவும், நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் மற்ற இடங்களில் வென்றவர்கள் அனைவரும் தோளோடு தோள் நின்று தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

மேலும் பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

அதோடு, இது மோடியின் வெற்றியல்ல, வளர்ச்சியை விரும்பும் இளைஞர்களின் வெற்றி.. வறுமை ஒழிப்பே இந்த அரசின் பிரதான கொள்கை!! அதை நோக்கியே எங்கள் பயணம் தொடரும் என்று மோடி தெரிவித்தார்.

2024-ம் ஆண்டுக்குள் நாட்டை மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் கனவு என்று மோடி தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.