உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Naren in Vikram Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் இந்தத் திரைப்படம் உருவாக உள்ளது.

கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசர் யூ டியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜூலை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் கைதி, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்த நரேன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.