Nannari Sarbath :
 Nannari Sarbath :

 Nannari Sarbath : வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது.

நன்னாரி வேரை நீர்விட்டு காய்ச்சி அதில் வெல்லம், எலுமிச்சை சாறுகலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடை காலங்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது.

நன்னாரியின் நன்மைகளில் சில:

▪ உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், உடல் வலி நிவாரணமாகவும் இது செயல்படுகிறது.

▪ மலச்சிக்கல் போக்க உதவுகிறது. அமிலத்தன்மையிலிருந்து நிவாரணமளிக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

▪ கல்லீரல் மற்றும் மண்ணீரல், சிறுநீரக கோளாறுகள், மூச்சுத் திணறல், இரத்த சோகை மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றின் வீக்கத்திற்கு இது சிறந்தது.

▪ நன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர அதிபித்தம் தீரும்.

▪ நன்னாரி வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றுடன் சாப்பிட வண்டு கடியினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் தீரும்.

▪ வேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள காமாலை தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here