Nanjil Sampath Speech
Nanjil Sampath Speech

Nanjil Sampath Speech – தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

அதில் அதிமுக – பாஜக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என்று பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தூத்துக்குடி அருகே தாளமுத்துநகரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: உலகம் சுற்றும் மோடியையே தன் வீட்டின் முன்பு நிற்க வைத்தவர் ஜெயலலிதா.

ஆனால் தற்போது உள்ளவர்கள் மோடிக்கு சேவகம் செய்து வருகின்றனர்.

மேலும் தமிழகம் தனது பெருமையை இழந்து தவிக்கிறது என்று வேதனையுடன் பேசினார்.

பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் குடும்பத்தினரை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை..என ஆதங்கமாக கூறினார்.

இந்நிலையில் மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளித்து விட்டு, தற்போது தேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்குள் தைரியமாக மோடி நுழைகிறார்.

இவ்வாறு தமிழகத்துக்குள் நுழையும் மோடியை தட்டிக் கேட்க இந்த ஆட்சியாளர்களுக்கு துணிவு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு மோடி வருகை குறித்து பல வாதங்களை முன் வைத்தார் நாஞ்சில் சம்பத் அவர்கள்.

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here