நண்பன் பட வாய்ப்பு தவற விட்டுள்ளார் விஜய் டிவி பிரபலம் ஒருவர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று நண்பன்.

சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்தியன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆனால் இந்த படத்தில் முதலில் சத்தியன் நடித்த ஸ்ரீ வட்சன் என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் டிவி பிரபலமான மதுரை முத்து தான் என தெரிய வந்துள்ளது.

சில காரணங்களால் மதுரை முத்துவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு சத்தியனுக்கு சென்றதாக கோலிவுட் ஒட்டகங்களை தகவல் ஒன்று பரவி வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது மதுரை முத்து மனம் திறந்தால் தான் தெரியவரும்.