Nanae Varuven Movie Update

தனுஷின் நானே வருவேன் என்ற படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Nanae Varuven Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது அடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இப்படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் செல்வராகவன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது தற்போது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.