நான் கடவுள் இல்லை படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவரது இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, பருத்திவீரன் சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை.

படத்தின் கதைக்களம் :

வீச்சருவாள் வீரப்பனான சரவணன் ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என உறுதியாக இருக்க ஜெயிலில் இருந்து வந்த சரவணன் நீதிபதி வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை கொன்று விட்டு சமுத்திரகனியை பழிவாங்க துடிக்கிறார். ஒரு கட்டத்தில் சமுத்திரகனியின் மகளை கடத்தி விடுகிறார்.

மறுபக்கம் எஸ்ஏ சந்திரசேகர் கடவுள் போல ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். யார் கடிதத்தின் மூலம் என்ன கேட்டாலும் அதை சந்திரசேகர் நிறைவேற்றி வரும் நிலையில் சமுத்திரகனியின் மகன் சரவணன் தன்னுடைய அப்பாவை கொலை துடிக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என லெட்டர் எழுதுகிறான். இதனால் அடுத்து நடந்தது என்ன? சமுத்திரகனி 2 சரவணனுக்கும் இடையேயான யுத்தத்தில் வென்றது யார்? இந்த பிரச்சனையை எஸ் ஏ சந்திரசேகர் தீர்த்தாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த சரவணன் மிரட்டு வில்லனாக நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்டோர் அவர்களின் கதாபாத்திரங்களை அழகாக செய்து கொடுத்துள்ளனர். எஸ்ஏ சந்திரசேகர் ஒரு கடவுள் அவதாரம் போல படத்தில் வலம் வருகிறார்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகு சேர்த்துள்ளது. சில இடங்களில் வழக்கமான லாஜிக்கல் தவறுகள் படத்தில் இடம் பெற்றுள்ளது.

REVIEW OVERVIEW
நான் கடவுள் இல்லை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
nan-kadavul-illai-movie-reviewமொத்தத்தில் நான் கடவுள் இல்லை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படம்.