பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய திருநங்கை நமிதா மாரிமுத்து செய்த வேலை அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

Namita MariMuthu Video After BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரத்திலேயே உடல்நலக் குறைபாடு காரணமாக வெளியேறியவர் நமிதா மாரிமுத்து.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமிதா மாரிமுத்து செய்த வேலை - குவியும் ரசிகர்களின் வாழ்த்து
திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் காயங்களுடன் வெளியேறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. மீண்டும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் எனவும் சொல்லப்பட்டு வந்தது.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நமிதா மாரிமுத்து சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆடை வாங்கி கொடுத்து அதனை அணிவித்து மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமிதா மாரிமுத்துவின் செயலுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.