Namitha Decision

Namitha Decision : கவர்ச்சி நடிகையான நமீதா எடுத்துள்ள திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் நமிதாவை பாராட்டியும் வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் நமீதா.

வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.

அதன் பின்னர் தயாரிப்பாளரும் நடிகருமான வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

நடிக்க தொடங்கிய நமீதா இனி எந்த படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் எனவும் முடிவெடுத்துள்ளார்.

நமிதாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பாராட்டி வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு நமிதா தற்போது அகம்பாவம் என்ற படத்தில் பத்திரிக்கை நிருபராக ( Press Reporter ) நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.