Nalan Kumaraswamy Upcoming Movie Hero

நலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Nalan Kumaraswamy Upcoming Movie Hero : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நலன் குமாரசாமி. சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக காதலும் கடந்து போகும் குட்டி ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இவர் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.