Nakshatra As Kannamma in Bharathi Kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Nakshatra As Kannamma in Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து கடந்த 23ஆம் தேதி நடித்து கொடுத்ததோடு விலகினார். இதற்கு காரணம் வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு, கதையில் ஏற்பட்ட மாற்றம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : பிரபல வழக்கறிஞர் இன்று வாதாடுகிறார்..

இப்படியான நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் இனி கண்ணம்மாவாக நடிக்கப் போவது யார் என்பது புகைப்படத்தோடு தெரியவந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நாயகியாக நடித்த நக்ஷத்ரா தான் நாயகியாக நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அவர் ஹேமாவுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் இணையத்தில் வெளியாகி வைரலாக இதுதான் உறுதியான தகவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிம்பு நல்ல Plan போட்டு என்னை ஏமாத்திட்டாரு – Producer Michael Rayappan கதறல்..! | AAA | STR | TR

ஆனால் உண்மை என்ன என்பது புதிய கண்ணம்மா நடித்துள்ள எபிசோட் ஒளிபரப்பானால் தான் தெரியும்.