Nakkheeran Gopal
Nakkheeran Gopal

Nakkheeran Gopal – சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில், இன்று ஆஜராக உள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு கடந்த 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது.

இதில் 250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பலை சேர்ந்த 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க காரணம் மூத்த பத்திரிக்கையர் நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களே.

இந்த நிலையில் நக்கீரன் இதழில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தாக்கி நக்கீரன் கோபால் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை சைபர் கிரைம் போலீசில் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார்.

இதை அடுத்து நேற்று, மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு நேற்று சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியது.

இதையடுத்து நக்கீரன் கோபால் சென்னை சைபர் கிரைம் போலீஸ் முன் இன்று ஆஜராக இருக்கிறார்.

நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ ஆதரங்களால் தான் பொள்ளாச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here