Nagarjuna Next Movie Title Secrets
Nagarjuna Next Movie Title Secrets

நாகர்ஜுனா அடுத்ததாக நடிக்க உள்ள தமிழ் படத்திற்கும் விஜய்க்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து தெரிய வந்துள்ளது.

Nagarjuna Next Movie Title Secrets : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஆந்திராவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரை போலவே தமிழில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய். நாகர்ஜுனா மற்றும் தளபதி விஜய் என இருவருக்கும் இடையே நல்ல ஒரு ஒற்றுமை இருந்து வருகிறது.

நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ஆசாத் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான வேலாயுதம் படத்தின் தளபதி விஜய் நாயகனாக நடித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது புதிய படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் ராம் கோபால் வர்மா இயக்கிய ஆபீசர் என்ற படத்தில் நாகர்ஜூனா நடித்திருந்தார்.

தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. தமிழிலும் நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளார். அதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்திற்கு சிமிட்டாங்காரன் என டைட்டில் வைத்துள்ளனர்.

சிமிட்டாங்காரன் என்ற வார்த்தை தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானது.

பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிம்டாங்காரன் என்பது சென்னை பாஷை. அதாவது கண்ணை சிமிட்டாமல் அழகாக பார்க்கும் ஆண் என்பது தான் இதன் பொருள்.

இந்த வார்த்தை நாகார்ஜுனாவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதால் அவர் நடிக்க உள்ள படத்திற்கு சிமிட்டாங்காரன் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த டைட்டிலுக்காகவே படம் ரசிகர்களிடையே நல்லவொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.