அவசர அவசரமாக நடத்தப்பட்ட நிச்சயத்திற்கு காரணம் சொல்லியுள்ளார் நாகர்ஜுனா.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக மாஸ் காட்டி வருபவர் நாகசைதன்யா. இவர் தமிழில் கஸ்டடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமந்தாவை காதலித்து வந்த நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களது திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நாக சைதன்யாயாவும் சோபிதா துலிபாலாவும் காதலித்து வந்ததாக தகவல்கள் பரவி வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த எட்டாம் தேதி சிம்பிளாக நடந்து முடிந்தது.
அதனை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால் அவசர அவசரமாக நிச்சயம் பண்ண என்ன காரணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நாகர்ஜுனா 8-8-8 என்ற சக்தி வாய்ந்த நாள் மிஸ் ஆக கூடாது என்பதற்காக தான் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார்.