நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயம் ஆகி விட்டதாக வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் நாகார்ஜுனா.

Nagachaitanya and Anushka Engagement Rumour : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா. பிரபல நடிகராக இருந்து வரும் இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நேரத்தில் நாகர்ஜுனா பல வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் பற்றி பேட்டி ஒன்றில் பேசுகிறார். அதாவது படப்பிடிப்புக்காக நாக சைதன்யா ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தார். அப்போது தான் நாக சைதன்யாவுக்கு அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தகவல் பரவியது.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

வீட்டுக்குத் தெரியாமல் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயம் ஆயிடுச்சா?? அதிர்ச்சியான நாகர்ஜூனா

அதிகாலையில் நான் நாக சைதன்யாவுக்கு போன் செய்து என்ன மகனே உனக்கும் அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துடுச்சாமே என கேட்டேன். அவர் உடனே அப்படியா என சத்தமாக சிரித்தார். அதோடு நிறுத்தாமல் அனுஷ்காவுக்கும் போன் செய்து கேட்டேன். அவரும் சிரித்தார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review

கடைசியில் தயாரிப்பாளர் ஒருவர் கிளப்பிவிட்ட வதந்திதான் இது என அனுஷ்கா பேட்டி ஒன்றில் கூறினார். இவ்வாறு நாகர்ஜுனா பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.