நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டோலிவுட் சினிமாவில் கலக்கி வரும் பிரபலங்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என அனைவருக்கும் தெரியும். மேலும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களது திருமணம் 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இப்படியான நிலையில் நாக சைதன்யாவிற்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவிற்கும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.