புது வீடு வாங்கி குடியேறியுள்ளார் நாக சைதன்யா.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணத்திற்கு பிறகு சமந்தா மலோடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது மட்டுமல்லாமல் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கி குடியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாக சைதான்யா வாங்கியுள்ள இந்த புதிய வீட்டின் விலை 15 கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.