Nadodigal 2 Sneak Peek
அஞ்சலிக்கும் சசிகுமாருக்கும் இடையே காதல் தீயை பெரியவர் ஒருவர் கொளுத்தி போடும் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், பரணி, அஞ்சலி, அதுல்யா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள் 2. இப்படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரே கொள்கையுள்ள சசிகுமாருக்கும் அஞ்சலிக்கும் இடையே காதல் தீயை கொளுத்தி போடுகிறார் பெரியவர், அஞ்சலி 5 மணிக்கு சசிகுமாரை வீட்டு வர சொல்கிறார். பெரியவர் கொளுத்தி போட்ட தீ இன்னும் என்னென்ன வேலையெல்லாம் பார்க்க போகுது என்பதை படத்தில் தான் பார்க்க வேண்டும்.

இந்த ஸ்னீக் பீக் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.