Nadodigal 2
நாடோடோடிகள் 2 படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் அடுத்ததடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றன.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள் 2.

இந்த படம் வரும் ஜனவரி 31-ம் தேதி வெளியாக உள்ளது. நாடோடிகள் படத்தில் நண்பனின் காதலுக்கு உதவிய சசிகுமார் நாடோடிகள் 2 படத்தில் ஜாதி, மத பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவது போல இப்படம் உருவாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க சமுத்திரக்கனியின் படம் என்றாலே நிச்சயம் சமூக கருத்துகள் அடங்கி இருக்கும் என்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு காரணமாக உள்ளது.

அதற்கேற்றாற் போல இப்படத்தின் ப்ரோமோ வீடியோக்களும் அடுத்ததடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி கொண்டே உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.