Nadigar Sanga Election 2019 | Kamal Haasan | Vishal | K Bhagyaraj | Swami Sankardas Ani | Pandavar Ani | Nasser | Tamil News
Nadigar Sanga Election 2019

நடிகர் சங்க தேர்தலில் கட்சி மாறியுள்ளார் கமல்ஹாசன். இது குறித்து சம்மந்தப்பட்ட கட்சியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

Nadigar Sanga Election 2019 : தமிழ் சினிமாவிற்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி ஒய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாண்டவர் அணி, சுவாமி சச்சிதானந்தா அணி என இரண்டு அணி போட்டியிடுகின்றன. இரண்டு அணியினரும் வாக்கு சேகரிக்கும் வேளையில் மும்மரமாக இறங்கியுள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் முன்னணி நடிகர் – ஜெயிக்க போவது யார்?

சுவாமி சச்சிதானந்தா அணியின் முதலில் கேப்டனை சந்தித்து ஆதரவு திரட்டினர். அத பின்னர் கமல்ஹாசனை சந்தித்து தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை காட்டியுள்ளனர்.

இதனை பார்த்தா கமல்ஹாசன் தேர்தல் வாக்குறுதிகளை பாராட்டியது மட்டுமில்லாமல் தங்களுக்கு ஆதரவு தருவதாகவும் கூறியதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

இதுவரை பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருந்து வந்த கமல்ஹாசன் தற்போது பாக்யராஜ் அணிக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி திரட்டி பாண்டவர் அணி நடத்திய கலை நிகழ்ச்சிகளால் கமல் தர்ம சங்கடத்திற்கு ஆளானதாக கூறியதாகவும் பாக்யராஜ் அணியினர் குறிப்பிட்டுள்ளனர்.