
நான் ரெடி தான் வரவா என்ற பாடல் 14 மணி நேரத்தில் படைத்த சாதனை குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் முதல் முதல் சிங்கிள் ட்ராக்காக நான் ரெடி தான் வருவாய் என்ற பாடல் நாளை விஜய் பிறந்தநாள் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தப் பாடல் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியானது.
இந்த பாடல் ப்ரோமோ வீடியோ வெளியான 14 மணி நேரத்தில் 5.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பாடல் ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
