நானே வருவேன் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் இவரது நடிப்பில் களைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் நானே வருவேன்.

நானே வருவேன் படம் மாஸா? டமாஸா? முழு விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

ஒரு ஊரில் பிரபு என ஒரு நல்லவனும் கதிர் என ஒரு கெட்டவனும் வாழ்ந்து வருகின்றனர். சிறு வயதிலிருந்து கெட்ட எண்ணங்களுடன் இருக்கும் கதிர் ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பா அம்மாவையே கொன்றுவிட்டு தனி மரமாக வாழ்ந்து வருகிறார். என்ற வம்பு தும்புக்கும் போகாத பிரபு தன்னுடைய மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இப்படியான நிலையில் மகளுக்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடைபெற அதற்கான காரணங்களை தேடி அலைகிறார் பிரபு. இவர்களது வாழ்க்கைக்கு கதிருக்கும் என்ன சம்பந்தம்? கடைசியில் மகளை இப்படி ஒரு பிரச்சனையிலிருந்து பிரபு மீட்டாரா என்பதுதான் படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் : கதிர், பிரபு என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிப்பை மிரட்டி எடுத்துள்ளார். பிரபுவாக பயந்த சுபாவம் கொண்ட மனிதராக நடித்த தனுஷ் கதிர் கதாபாத்திரத்தில் அப்படியே அதற்கு எதிர் மாறாக படு மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் அவரது பங்கிற்கு அழகான நடிப்பை கொடுத்து படத்தை திறம்பட இயக்கியுள்ளார். அவரது பாணியில் படத்தை இயக்கியிருந்தாலும் சில புதுயுக்திகளை கையாண்டு படத்தினை மெருகேற்றி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் அமைந்த விதம் பிஜிஎம் என அனைத்தும் தெறிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கதிரின் பின்னணி இசை வேற லெவல்.

நானே வருவேன் படம் மாஸா? டமாஸா? முழு விமர்சனம்

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. ஹாரர் திரில்லர் மூவியாக பதிவு செய்ததில் இவரது பங்கு பெரியளவில் உள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. தனுஷ் நடிப்பு

2. இசை

3. ஒளிப்பதிவு

4. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

ஆளவந்தான் படத்தைப் போல சில இடங்களில் தோன்றுகிறது. மேலும் சில ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்கள் நினைவுக்கு வந்து போகிறது.