நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் இடையே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “நானே வருவேன்”.

நானே வருவேன் படத்தின் சென்சாரை வெளியிட்ட தனுஷ்!!!…. அசத்தலான புதிய போஸ்டர் வைரல்!.

இப்படத்தை அவரது சகோதரரும் பிரபல திரைப்பட இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நானே வருவேன் படத்தின் சென்சாரை வெளியிட்ட தனுஷ்!!!…. அசத்தலான புதிய போஸ்டர் வைரல்!.

இதில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் தனுஷின் போஸ்டர்கள், டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரவபூர்வமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

நானே வருவேன் படத்தின் சென்சாரை வெளியிட்ட தனுஷ்!!!…. அசத்தலான புதிய போஸ்டர் வைரல்!.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் Censored சான்றிதழ் குறித்த புதிய போஸ்டரை பகிர்ந்திருக்கிறார். அப்போஸ்டரில் நானே வருவேன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.