Naan Sirithaal
ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ஐஸ்வர்யா மேனன்.

தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நட்பே துணை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்ப்பை போலவே வெற்றி பெற்றது.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி தற்போது நான் சிரித்தால் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தற்போது இந்த படத்தின் நாயகியாக தமிழ் படம் 2 படத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா மேனன் கமிட்டாகி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.