Naan Kadavul Issue With Ajith
Naan Kadavul Issue With Ajith

பாலா, அஜித் சண்டையின் போது ரூமிற்குள் நடந்தது என்ன? என்பது குறித்து நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

Naan Kadavul Issue With Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் நான் கடவுள். இந்த படத்திற்காக தன்னுடைய உருவத்தையும் மாற்றிக்கொண்டார் அஜித்.

ஆனால் இறுதியில் பாலாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இப்படத்திலிருந்து அஜித் விலகிக் கொண்டார்.

விஜய்யின் மகனுடைய தற்போதைய நிலை என்ன? விஜய் தரப்பிலிருந்து வெளியான தகவலால் பெருமூச்சுவிடும் ரசிகர்கள்.!

இதனால் இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி தரவேண்டுமென பேசப்பட்டதாகவும் இதனால் அஜித் ரூமிற்குள் வைத்து தாக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வைரலாகின.

இது குறித்து நேரில் பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் பத்திரிகையாளரிடம் கூறியிருப்பதாவது அஜித் தாக்கப்பட்டதாக சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அஜித் வாங்கிய அட்வான்சை மட்டும் தான் தருவேன் என கூறினார். ஆனால் பாலா தரப்பில் வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என கூறினார்கள்.

இதனால் ஒரு கட்டத்தில் கடும் கோபமான அஜித் வட்டியுடன் திருப்பித் தருகிறேன் என கூறி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார் என்று கூறியுள்ளார்.